ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், புரோபா - 3 செயற்கைக்கோள்களை,
பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் வாயிலாக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி
ஆய்வு மையம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது.
நம் நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை முன்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக செயற்கைக்கோள்களை இஸ்ரோ உருவாக்கி, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்துகிறது.
இது தவிர, வணிக நோக்குடன் வெளிநாடுகளின் செயற்கைக்கோளும் விண்ணில் நிறுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை, நியுஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மேற்கொள்கிறது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய, புரோபா - 3 பெயரில் இரு செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளது. அவற்றின் எடை, 550 கிலோ. இந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி59 ராக்கெட், நேற்று முன்தினம் மாலை, 4:08 மணிக்கு விண்ணில் பாய இருந்தது.
இதற்கான, கவுன்ட் டவுன் துவங்கிய நிலையில், ராக்கெட் விண்ணில் பாய தயாராக இருந்த ஒரு மணி நேரத்திற்கு முன், செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்தது.
அந்நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ராக்கெட் ஏவுவதை ஒத்திவைத்த இஸ்ரோ, நேற்று மாலை ஏவப்படுவதாக அறிவித்தது.
அதன்படி, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட், புரோபா - 3 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, நேற்று மாலை 4:04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 18வது நிமிடத்தில், ராக்கெட் திட்டமிடப்பட்ட புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது.
அவை அதிகபட்சம், 60,530 கி.மீ., உயரமுள்ள நீள்வட்ட சுற்று பாதையில் நிறுத்தப்பட்டு, பின் இணை சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்படும்.
பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து, சதீஷ் தவான் விண்வெளி மைய கட்டுப்பாட்ட அறையில் இருந்த விஞ்ஞானிகளுக்கு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
பின், சோம்நாத் பேசும் போது, பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட், திட்டமிடப்பட்ட புவிவட்ட பாதையில், புரோபா - 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
இது, பி.எஸ்.எல்.வி., வகையில், 61வது ராக்கெட். அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள், என்றார்.