JEE Main exam for engineering courses to be held on May 18 next year - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 9, 2024

JEE Main exam for engineering courses to be held on May 18 next year

1342523
அடுத்தாண்டு மே 18-ல் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு

பொறி​யியல் படிப்பு​களுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு அடுத்​தாண்டு மே 18-ம் தேதி நடைபெற உள்ளதாக கான்​பூர் ஐஐடி அறிவித்துள்ளது.

நாடு முழு​வதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத்​தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இவை ஜேஇஇ முதன்​மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்​களாக நடத்​தப்​படும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடத்​தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்வை நடத்​தவுள்ள கான்​பூர் ஐஐடி தற்போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்படி பிரதானத் தேர்வு 2 தாள்​களாக தலா 3 மணி நேரம் நடைபெறும். இவ்விரு தேர்​வு​களை​யும் தேர்வர் எழுத வேண்​டியது கட்டாய​மாகும். முதல் தாள் காலை 9 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்​தப்​படும். ஜேஇஇ முதன்​மைத் தேர்​வில் தேர்ச்சி பெறு​பவர்கள் மட்டுமே பிரதானத் தேர்வை எழுத முடி​யும். இந்த பிரதானத் தேர்​வில் தேர்ச்சி பெறு​பவர்​களுக்கு நாடு முழு​வதும் உள்ள 23 ஐஐடி.களில் சேர்க்கை இடங்கள் கலந்​தாய்வு மூலமாக ஒதுக்​கப்​படும். இதற்கான இணையதள விண்​ணப்பப் பதிவு தொடங்​கும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் வெளி​யிடப்​படும். மேலும், கூடுதல் விவரங்களை https://jeeadv.ac.in/ என்ற வலைத்​தளத்​தில் சென்று அறிந்து கொள்​ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரி​வித்​தனர்.

ஜேஇஇ முதன்​மைத் தேர்வு வரும் ஜனவரி மற்றும் ஏப்ரல் ​மாதங்​களில் 2 கட்​டங்​களாக நடத்​தப்​படும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டுள்ளது குறிப்​பிடத்​தக்​கது.

Post Top Ad