கர்நாடக மாநிலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல்
பாடங்களில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என
அமைச்சர் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் அனில்குமாரின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மதுபங்காரப்பா கூறியதாவது:
கட்டாய கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தியதால், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணத்தை, அரசே முழுமையாக செலுத்துகிறது. இந்த திட்டம் எட்டாம் வகுப்பு முதல் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., வரை இத்திட்டம் விஸ்தரிக்கப்படுவதால், நகர் மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தற்போது மாநிலத்தில் ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் பாடங்களில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.