Practical Exam Tips! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 16, 2024

Practical Exam Tips!


 

 *செய்முறை தேர்வில் உள்ள தியரி பகுதியை நன்கு மனப்படம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விடைத்தாளில் மாணவர்கள், தங்களுக்கு வந்துள்ள எக்ஸ்பெரிமெண்டின் தியரி பகுதியை முதலில் எழுத வேண்டும். அதன் பின்னரே செய்முறையை செய்ய தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர்.

*முதலில் குறிக்கோள் எழுத வேண்டும். அதாவது மாணவர்கள் தங்களுக்கு வந்துள்ள கேள்வியை புரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார், என்ன கண்டுபிடிக்கப் போகிறார் என்பதைப் பற்றி சுருக்கமாக எழுதுவது ஆகும்.

*அடுத்து எந்தெந்த சாதனங்களை வைத்து எக்ஸ்பெரிமெண்டை செய்யப் போகிறார் என்பதையும் அந்த சாதனங்களின் பெயர்களையும் விரிவாக எழுத வேண்டும். இவை அனைத்தும் மாணவர்கள் தங்கள் அப்சர்வேஷன் நோட்டில் எழுதி இருப்பர். எந்தெந்த எக்ஸ்பெரிமெண்ட்டுக்கு எந்தெந்த கருவிகள் என்பதை கவனமுடன் எழுத வேண்டும்.

*இயற்பியல் செய்முறை தேர்வில் சர்க்யூட் வரைபடம் அல்லது பார்முலாக்களை கண்டிப்பாக எழுத வேண்டும். இதற்கு பலமுறை வரைந்து பார்த்தும் எழுதி பார்த்தும் பயிற்சி எடுப்பது அவசியம். உயிரியல் மற்றும் வேதியியல் நடைமுறைத் தேர்வில் வரைபடம் கட்டாயம் வரைந்து பாகம் குறிக்க வேண்டும்.

*அட்டவணை எழுதுதல்: அட்டவணை (டேபுலேஷன்) வரைந்து அதில் மாணவர்கள் செய்முறையின் போது கிடைக்கும் ரீடிங்குகளை அதில் குறிக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கும் பல ரீடிங்குகள் வைத்தே சராசரி முடிவை கணக்கிட முடியும். வேதியியல் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ள சால்ட்-ஐயும், டைட்ரேஷன் செய்முறையில் கிடைக்கும் முடிவையும் அட்டவணையில் குறிக்க வேண்டும். செய்முறைக்கான ஒவ்வொரு படியையும் தெளிவாக எழுத வேண்டும்.

*செயல் முறை எழுதுதல்: இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் செயல்முறை எழுதுதல் (புரொசீஜர்) பகுதிக்கு அதிக மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வாக இருப்பின் புரோகிராமை எழுத வேண்டும். இதில் நிறுத்தற்குறி, முற்றுப்புள்ளி போன்றவைகளை கவனமாக குறியிட வேண்டும்.

*நிறைவாக முடிவுரை எழுத வேண்டும். இதில் செய்முறை, பெறப்பட்ட முடிவு ஆகியவற்றை சுருக்கமாக எழுதி நிறைவு செய்ய வேண்டும்.

*இறுதியாக ரிசல்ட் (முடிவு) குறிக்க வேண்டும். இயற்பியலில் பார்முலாக்கள் பயன்படுத்தி பெறப்பட்ட முடிவு அல்லது வேதியியலில் செய்முறை மூலமாக கிடைக்கப்பட்ட முடிவை இறுதியாக எழுத வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் புரோகிராம் சரியாக எழுதி இருந்தால் அதற்கான முடிவு சரியாக வரும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனியாக மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு மையத்திற்கு வேறு பள்ளியில் இருந்து வரும் ஆய்வாளர் இது அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டே மதிப்பெண் வழங்குவார்.

கவனிக்கப்பட வேண்டியவை:

*தேர்வு அறையில் நண்பர்களுடன் பேசுவதை தவிர்த்தல் வேண்டும்

*தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கருவி அல்லது சாதனங்கள் செயல்படவில்லையென்றால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் அதனை சரி செய்தோ அல்லது மாற்று ஏற்பாடு செய்து தருவார்.

*எழுதி முடித்தப்பின் அனைத்தும் சரியாக எழுதப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தபின் விடைத்தாளை சமர்ப்பிக்க வேண்டும்.

Post Top Ad