எல்கேஜி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி அதில்
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையில்
வெள்ளி விழா ஆண்டையொட்டி தமிழக அரசு சார்பாக போட்டி தொடர்பாக அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது
இதில் எல்கேஜி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பல வகையிலான போட்டிகள்
அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி,
ஓவிய போட்டி என பல போட்டிகளை நடத்தவுள்ளது. இதற்கு இன்றோடு விண்ணப்பிக்க
கடைசி நாளாகும்.
விருதுநகரில் இறுதி போட்டி
இதனிடையே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி 2 லட்சம்,
1அரை லட்சம் என பல பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக
சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது என
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பாக கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை
நிறுவி 25 வது வெள்ளி விழா ஆண்டு 01 ஜனவரி 2025 வருவதை முன்னிட்டு பல்வேறு
நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் விருதுநகர் மாவட்ட
நிர்வாகத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான
திருக்குறள் வினாடி வினா போட்டி 28.12.2024 அன்று நடத்தப்படவுள்ளது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு
அதற்கான முதல்நிலை தேர்வு மாவட்ட அளவில் 21.12.2024 சென்னை மாவட்டத்திலுள்ள
அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிற்பகல் 2.00
மணிக்கு சென்னை-31, சேத்துப்பட்டு, கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்
நடைபெறவுள்ளது
போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் தங்கள் விவரங்களை 20.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் Google Form https://forms.gle/DWCbZGr7nh1rtdMm8
பூர்த்தி செய்து தங்களை பதிவு செய்து கொள்ள சென்னை மாவட்டத்திலுள்ள
அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்கள்
மற்றும் அனைத்து வகையான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும்
மேற்காண் போட்டியில் கலந்து கொள்ள செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.