பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி.,யின் புதிய விதிமுறைகளின்படி, 12ம்
வகுப்பு அல்லது இளநிலைப் பட்டப்படிப்பில் எந்த பிரிவை படித்திருந்தாலும்,
தேசிய அல்லது பல்கலைக்கழக அளவிலான நுழைவுத் தேர்வில் தகுதி பெற்று.
விருப்பமான எந்தத் துறையிலும் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில்
சேர்க்கை பெற முடியும்.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வி வரைவு விதிமுறைகளை யு.ஜி.சி., சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, புதிய விதிமுறைகள் அதிக நெகிழ்வுத்தன்மையையும், பல்துறை கற்றல் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது என்று யு.ஜி.சி., தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்து, பல்கலைக்கழகம் நேரடியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை, இளநிலை பாடத்திட்டத்தின் இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.