பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு முறை: UGC அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, December 21, 2024

பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு முறை: UGC அறிவிப்பு




பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு முறை: UGC அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வரைவு விதிமுறைகளை நேற்று அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின் மூலம் எளிய முறைகள் அறிமுகப்படுத்தும், ஒழுங்குடன் கூடிய கடினத்தன்மையை அகற்றும், உள்ளடக்கத்தை கொண்டு வரும் மற்றும் மாணவர்களுக்கு பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை வழங்கும்.

இந்த மாற்றம் உயர்கல்வி நிறுவனங்களில் (எச்.இ.ஐ) ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தவும் வழிவகை செய்கிறது. மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சேரலாம்.

ஒரே நேரத்தில் இரண்டு யுஜி/பிஜி திட்டங்களை தொடர எளிய நடைமுறைகளுக்கான விதிகள் இந்த விதிமுறைகளில் இடம்பெறுகின்றன.

பள்ளிக் கல்வி முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தங்களின் திறனை வெளிப்படுத்தினால், பள்ளிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல், உயர்கல்வியில் எந்தவொரு திட்டத்திலும் படிப்பைத் தேர்வு செய்யலாம்.

நுழைவுத் தேர்வில் கிரெடிட்டில் 50 சதவீதத்தை தங்கள் முக்கிய பாடங்களிலும், மீதமுள்ள கிரெடிட்டுகளை திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி அல்லது பலதரப்பட்ட பாடங்களுக்கு ஒதுக்கப்படும்.

12ம் வகுப்பு அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு மாணவன் எடுத்த துறைகளைப் பொருட்படுத்தாமல், ஒரு மாணவன் தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழக அளவிலான நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றால், இளங்கலை திட்டம் அல்லது முதுகலை திட்டத்தின் எந்தவொரு துறையிலும் சேர தகுதியுடையவர்.

தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரைத்த பல்வேறு கற்றல் முறைகள் மற்றும் முழுமையான மற்றும் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களில் மாணவர்களின் குறைந்தபட்ச வருகை தேவை குறித்து உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் சட்டரீதியான அமைப்புகளின் ஒப்புதலுடன் முடிவு செய்யும்.

Post Top Ad