ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் தகவல்


 1346699

மத்திய அரசுபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த உறுப்பினரின் கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அண்மையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிவித்தது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எனப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெற முடியும். ஆனால், இத்திட்டம் குறித்து விரிவான செயல்முறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. விரைவில் வெளியிடும் என நம்புகிறோம்.

இந்நிலையில், மத்திய அரசுபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் அறிக்கை பெற்று முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive