G.O 28 - Special CL to Government Servants - நோய்களுக்கான சிறப்பு தற்செயல் விடுப்புகள் குறித்த அரசாணை (24.02.2017) - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 5, 2025

G.O 28 - Special CL to Government Servants - நோய்களுக்கான சிறப்பு தற்செயல் விடுப்புகள் குறித்த அரசாணை (24.02.2017)


அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.

ஆ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்பவரின் கணவருக்கு அறுவை மருத்துவம் நடந்த நாள் முதல் ஏழு நாள்கள் வழங்கப்படும்.

இ) குடும்ப நலத்திட்ட அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆண் ஆசிரியருக்கு 8 நாள்களும் பெண் ஆசிரியருக்கு 20 நாட்களும் வழங்கப்படும். ஆனால் மகப்பேறு காலத்தில் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் பெண் ஆசிரியர்க்கு இவ்விடுப்பு கிடைக்காது

ஈ) நாடளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவோருக்கு 30 நாட்கள் வரையில் இவ்விடுப்பு வழங்கப்படும்.

உ) நாய் கடித்தவருக்கு ஏற்பளிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்ள இவ்விடுப்பு கிடைக்கும்.

ஊ) ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு அப்பணியில் ஈடுபடுத்தப்படும் காலத்திற்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு


Click Here to Download - G.O 28 - Special CL to Government Servants - Full Order (24.02.2017) - Pdf




Post Top Ad