ஐஐடி,
என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில்
சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும்.
முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இது 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை
தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக
நடத்துகிறது.
அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நவம்பர் 22-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், எந்தெந்த நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது என்ற விவரத்தை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.