உலக காசநோய் தினம்
திருக்குறள்:
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: பண்புடைமை
குறள் எண்:996
பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்: அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பொருள்:
உலகம் பண்புடையார் ஒழுக்கத்தால் வாழ்கின்றது. அஃதில்லாவிடின்
அழிந்து போயிருக்கும்.
பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்
Face the danger boldly than live in fear.
இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.
2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.
பொன்மொழி :
கட்டளையிட விரும்புவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ---அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
1. நெடுஞ்சாலையில் அவசர அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைபேசி சாவடி எது?
விடை: SOS (save our souls).
2. VIVO நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
விடை: சீனா
English words & meanings :
Backache. - முதுகுவலி
Blood. - இரத்தம்
வேளாண்மையும் வாழ்வும் :
உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீரை உபயோகியுங்கள்.
மார்ச் 24
உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)
உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்
நீதிக்கதை
யானையும் பலமும்
ஒரு மிக பெரிய காட்டில் ஒரு பெரிய யானை வாழ்ந்து வந்தது.அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டில் வாழ்ந்து வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்தார்கள்.
யானை வர்ற பக்கம் கூட போகாமல் பயந்து, அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாமல் செய்தன.
இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்தது.
தன்னோட பழகாம தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தன்னை எல்லாரும் உதாசீனப் படுத்துறது யானைக்கு வருத்தமாக இருந்தது.
ஒரு நாள் காட்டுக்குள் பெரிய மழை பெய்து திடீர் வெள்ளம் வர ஆரம்பித்தது.குட்டி குட்டி மிருகங்கள் வாழும் இடத்தை சுற்றி பெரிய ஆறு மாதிரி தண்ணீர் ஓட ஆரம்பித்தது. அதனால் தீவில் எல்லா மிருகங்களும் உள்ளேயே மாட்டிக்கொண்டன.
வெளிய வந்து உணவு தேட முடியாத நிலை ஏற்பட்டது.
எல்லா மிருகங்களும் தங்களுடைய குட்டிகளுடன் பட்டினி கிடந்தன.
அந்த பக்கம் வந்த யானை இதை எல்லாம் பார்த்தும் ,ரொம்ப நாளாக தன்னோட வேலையை மட்டும் பார்த்து வந்த யானை ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது.
அப்போது,ஒரு குட்டி குரங்கு "யானை மாமா எங்க குடும்பமே பசியில் கிடக்கு எங்களுக்கு உதவ கூடாதான்னு"என்று கேட்டது.
அதை பார்த்து சிரித்த யானை "நான்தான் அரக்கன் மாதிரி இருக்கிறேன் என்னை பார்த்து பயமாக இல்லையா?" என்று கேட்டது.
அந்த குட்டி குரங்கு, "எங்க அப்பா அம்மா உங்கள் உருவத்தைப் பார்த்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வந்திடக் கூடாதுனு அப்படி சொல்லி வளர்த்தாங்க ,ஆனா ஒருத்தரோட உருவத்தை வைத்து அவர்களுடைய குணத்தை எடை போடக் கூடாதுனும் சொல்லி இருக்காங்க ,உங்களுடைய அமைதியான வாழ்க்கை முறையை பார்த்த எனக்கு நீங்க ஆபத்தானவர்னு தோன்றவில்லை" என்று கூறியது.
முதல் முறையாக ஒரு குட்டி மிருகம் தன்னிடம் பேசுவது யானைக்கு ரொம்ப சந்தோசம். உடனே தன்னோட துதிக்கையை கொண்டு எல்லா மிருகங்களையும் காப்பாற்றியது.
அன்றிலிருந்து யானையையும் தங்களில் ஒருத்தராக நினைத்து பழக ஆரம்பித்தார்கள். அந்த குட்டி மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளையும் அந்த யானையுடன் விளையாட அனுமதித்தார்கள்,அதனால் ரொம்ப சந்தோசமாக வாழ ஆரம்பித்தது யானை.
இன்றைய செய்திகள்
24.03.2025
* தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* தமிழகத்தில் இன்று கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* லடாக் பகுதியில் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளதற்கு, தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
* கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு.
* தேசிய மகளிர் ஹாக்கி போட்டி: 4-வது நாள் ஆட்டத்தில் ஒடிசா, ஹரியானா, மிசோரம், மத்திய பிரதேசம் அணிகள் வெற்றி.
* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்க வீராங்கனை கோகோ காப்.
Today's Headlines
* Electricity board officials have stated that in Tamil Nadu, 'hybrid' power plants, combining wind and solar energy, will be established through public-private partnerships.
* The Chennai Meteorological Department has forecast heavy rainfall in 8 districts of Tamil Nadu today, including Coimbatore and Erode.
* India has expressed its opposition through diplomatic channels to China's illegal occupation of Ladakh and the creation of two districts, as stated by Minister of State for External Affairs Kirti Vardhan Singh in Parliament.
* The US government has decided to deport 500,000 people from four countries, including Cuba.
* National Women's Hockey Competition: Odisha, Haryana, Mizoram, and Madhya Pradesh teams won on the 4th day of the competition.
* Miami Open Tennis Tournament: American player Coco Gauff advanced to the 4th round.
Covai women ICT_போதிமரம்