மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு நன்றாக படிக்க மன்றாடிய தலைமை ஆசிரியர்

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். என்றாலும் இவர்களில் பலர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை, சரிவர படிப்பதில்லை என கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாணவ, மாணவியரையும் வழக்கம்போல் பள்ளி மேடைக்கு முன் தலைமை ஆசிரியர் ரமணா வரச்சொன்னார். பிறகு மாணவர்கள் முன் தரையில் விழுந்து வணங்கியதுடன் 50 தோப்புக்கரணமும் போட்டார். பிறகு, "இனியாவது உங்களுக்காக நீங்கள் படியுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள்" என வருத்தத்துடன் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive