கோவை பன்னீர்மடை அரசு மேல்நிலைப்பள்ளியில் Alumni மாணாக்கர்கள் கணினிகள் வழங்கி சிறப்பிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, March 23, 2025

கோவை பன்னீர்மடை அரசு மேல்நிலைப்பள்ளியில் Alumni மாணாக்கர்கள் கணினிகள் வழங்கி சிறப்பிப்பு

கோவை,: பன்னீர்மடை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மறுமலர்ச்சி நாளாக அமைந்தது. 2002-2003 கல்வியாண்டில் இப்பள்ளியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள், தங்கள் பள்ளிக்கு நான்கு புதிய கணினிகளை வழங்கி மறுமுன்னேற்றத்தின் பாதையை உருவாக்கினர்.
 
பெங்களூரில் உள்ள CSG Systems International Pvt Ltd நிறுவனத்தின் உதவியுடன், மதிப்புமிகு விஜயகுமார் ராதாகிருஷ்ணன், ராகவன் அருள்செல்வம், கணேசன் ராமசாமி ஆகியோர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கணினிகளை நன்கொடையாக வழங்க முன்வந்தனர். இந்த முயற்சியில் 2003 ல் இதே பள்ளியில் பயின்ற பலரும் முக்கிய பங்கு வகித்தனர்.
 
பள்ளியின் முன்னாள் இயற்பியல் ஆசிரியரும், தற்போது துணை தலைமை ஆசிரியராக (AHM) பணியாற்றும் திருமதி தேவசேனா அவர்களிடம் இந்த கணினிகள் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சித்ரா, ஆசிரியர்கள், மாணவர்கள், 2003 கல்வியாண்டு மாணவர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
 
பள்ளிக்காக மனமார்ந்த பங்களிப்பு செய்த CSG Systems International Pvt Ltd நிறுவனத்திற்கும், இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தலைமை ஆசிரியர் திருமதி சித்ரா நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வு, பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க உதவுமென்றும், எதிர்காலத்தில் இத்தகைய சமூகப் பணிகள் மேலும் நடக்க வேண்டும் என விழாவில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
 
"பள்ளியில் படித்த நினைவுகள் காலத்தால் மாறாது. திரும்பி வந்து பள்ளிக்காக செய்யும் சேவை அளவிட முடியாத மகிழ்ச்சியை தருகிறது" என பழைய மாணவர்கள் உணர்ச்சி கனிந்தவாறு தெரிவித்தனர்.

Post Top Ad