பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - கோரிக்கை நிராகரிப்பு?

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை நிராகரிப்பு 

முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பிய நிலையில் அரசு சார்பில் குறுஞ்செய்தி மூலம் பதில்

அரசு பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ் பணி நியமனம் செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

"பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிப்பு - ஏமாற்றம்". "பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது". கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு. பணி நிரந்தரம் தொடர்பாக முதல்வர் அலுவலகம், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பி இருந்தனர் பகுதி நேர ஆசிரியர்கள். 

கோரிக்கை கடிதங்களை அனுப்பியவர்களுக்கு தமிழ்நாடு அரசு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பிய அதிர்ச்சி தகவல் "பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக குறுஞ்செய்தியில் அறிவிப்பு". 12000 பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive