தமிழகத்தில் தற்போது கடும் கோடை வெப்பநிலை நிலவி வருகின்றது. பொதுவாக ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் இருந்து கோடை வெயில் அதிகரிப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் வருவதற்கு முன்பே மார்ச் முதல் வாரத்தில் இருந்து வெப்பம் அதிகரிக்க துவங்கியது. மேலும் மார்ச் மூன்றாம் வாரத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பநிலை தாண்டி பதிவாகியுள்ளது.
இதனால் பள்ளி மாணவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிகளில் மின்விசிறிகள் பயன்படுத்தப்பட்டாலும் மாணவர்கள் பகல் வேலைகளில் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக மாணவர்களின் கவனம் பாடங்களை கவனிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் அறிவுத்துள்ளது.
வெயில் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதியும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் மாலை வரை பள்ளிகள் செயல்படாமல் சற்று முன்னதாக மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதேபோல் வெயில் அதிகம் உள்ள மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளிகளை போன்று மாணவர்களை முன்கூட்டியே வீட்டிற்கு அனுப்பு பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இதில் கடுமையான சோர்வுக்கு ஆளாகின்றனர்.
மேலும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு காலம் என்பதால் தேர்வு சமயங்களில் அரை நாள் மட்டும் பள்ளிகளை வைத்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பினால் மாணவர்கள் களைப்படையாமல் அடுத்த தேர்வுக்கு தயாராக ஏதுவாக இருக்கும் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment