அதற்கு ஒன்பது மாதங்கள் கால அவகாசம் வழங்கியபோதே, திராவிட மாடல் அரசு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தாது என்பது நிரூபணம் ஆகியிருந்தது.
தற்போது 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் பழைய ஓய்வூதியம் குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடாதது என்பது நாங்கள் சொன்னதைச் செய்ய மாட்டோம் என்பதற்கு சாட்சியம் அளித்துள்ளது.
காலிப் பணியிடங்களைப் பொறுத்தவரையில், கடந்த நான்காண்டுகளில் 78,882 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாவும் இந்த ஆண்டில் மட்டும் 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாண்புமிகு நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசிலுள்ள 4 இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எந்தவித முன்மாதிரி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இது ஆட்சி நிர்வாகத்தினை வெகுவாக பாதிக்கும் என்பதோடு, படித்த இளைஞர்களின் அரசு வேலைக் கனவினைச் சிதைப்பதோடு, 69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியினையும் சிதைக்கிறது.
ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒருநிலைப்பாடும் தமிழகத்தின் முதலமைச்சராக அமர்ந்தபின்னர் வேறொரு நிலைப்பாடும் எடுப்பது என்பது மாண்புமிகு முதலமைச்சரின் மீதான நம்பகத்தன்மையினை இழக்கச் செய்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சரின் இந்த போக்கு என்பது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அச்சத்தினை உருவாக்கக் கூடியது.
மொத்தத்தில் இந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் என்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு எதிரான பட்ஜெட் தேர்தல் வாக்குறுதிகளை நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என்ற சமூகத்தினை புறக்கணித்திருக்கிறது திராவிட மாடல் அரசு.
2024 பாராளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாஜக அரசு குறித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கள் அவர்களின் பொன்வரிகளான "பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" என்பதைக் குறிப்பிட்டிருந்தார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலின்போது சட்டிக்காட்டிய ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழியினை ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் "மறக்கல, மறுக்கல" என்பதனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடமைப்பட்டுள்ளது.
செயலாளர்
14/3/25 "தலைவர்
0 Comments:
Post a Comment