‘தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு அமல்படுத்த ஏஐ பாடத்திட்டம் தயார்’ - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, March 24, 2025

‘தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு அமல்படுத்த ஏஐ பாடத்திட்டம் தயார்’

அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு அமல்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டம் தயாராக இருப்ப தாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பொறியியல் துறை சார்பாக பள்ளிக்கல்வியில் செயற்கை தொழில் நுட்ப பயன்பாடு என்ற கண்காட்சி நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: ஐடி நிறுவனங்கள் உதவி: அரசுப் பள்ளிகளிலும், மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் நிதியுதவி பெறும் பள்ளிகளி லும் அடுத்த ஆண்டுக்கான கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாடத் திட்டம் தயாராக உள்ளது. இந்த பாடத் திட்ட மாற்றம் பிரபல ஐடி நிறுவனங்களின் உதவியோடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் முடிவடைந்துவிடும்.

கல்வியை மேம்படுத்தும் வகையில் 8 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடப்பு மாதத்திலும், 500 உதவி பெறும் பள்ளிகளில் 3 மாதங்களிலும் உயர்தொழில் நுட்ப ஆய்வுக் கூடங்கள் அமைக் கப்படும். இப்பள்ளிகளில் கணினி மற்றும் செயற்கை தொழில் நுட்ப பயன்பாட்டில் பயிற்சியளிக் கும் ஆசிரியர்களுக்கு கல்லூரிகள் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சுவாச செயல் பாட்டை கணிக்கும் தொழில்நுட் பம், பார்வையற்றோருக்கான அறி திறன் கண்ணாடி, விளையாட்டு முறையில் நீட் தேர்வுக்கான கல்வி செயலி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுத் திட் டங்கள் விளக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஸ்ரீராமச் சந்திரா பொறியியல் தொழில் நுட்பத் துறை தலைவர் டி.ரகுநாதன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அபிராமி முருகப் பன், பல்கலைக் கழகத்தின் திறன் மதிப்பீடு உட்குழுவின் ஒருங் கிணைப்பாளர் ஏ.ரவி, பொறி யியல் தொழில்நுட்பத் துறைத் துணைத் தலைவர் ஏ.சரவணன், 60-க்கும் மேற்பட்ட பள்ளி முதல் வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Post Top Ad