திருப்பூர் அருகே பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல்போனை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு; திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார்.
கடந்த 11ம் தேதி தேர்வு அறையில் அவர் மொபைல்போன் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், தலைமை ஆசிரியர் தாமோதரன் 3 மொபைல்போன்களை கொண்டு சென்றதும், அதை தேர்வு அறையில் பயன்படுத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment