தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 3ம் தே தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைந்தது. இப் போது விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தமி முகம் முழுவதும் 83 முகாம் களில் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணி வரும் 17ம் தேதி நிறைவடையும். தொடர்ந்து பிளஸ் 1 விடைத்தாள் திருத் தும் பணி தொடங்கும்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு வரும் 15ம் தேதி நிறைவு பெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 22ம் தேதி தொடங்கி 30ம் தேதி நிறைவு பெறும்.
இந்நிலையில் பிளஸ் 2. பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முதுநிலை ஆசிரி யர்களுக்கு வழங் வழங்கப்படும் அதே நடைமுறையை 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்ட மைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரு கிறது. இதில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளரின் கீழ் 6 உதவி தேர்வாளர்கள் (முது நிலை பட்டதாரி ஆசிரியர்) பணியாற்றுவார்கள்.
ஒவ் வொரு உதவி தேர்வாளரும் ஒரு நாளைக்கு 24 விடை தாள்கள் மதிப்பீடு (திருத்த) விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழக தேர்வுத்துறை... பிளஸ் 2 போல 10ம் வகுப்புக்கும் பேப்பர்கள் கொடுங்க ஒரே வேலைக்கு ஒரே சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை செய்ய வேண்டும்.
செய் முறை தேர்வு இல்லாத பாடங்களில் 90 மதிப்பெண், செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் 70 மதிப்பெண் களுக்கு மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த ஆசிரியர்களுக்கு ஒரு விடைத் தாளுக்கு ரூ. 10 வீதம் உழைப் பூதியம் வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஒவ் வொரு முதன்மை தேர்வாள ருக்கு 10 உதவி தேர்வாளர்கள் (பட்டதாரி ஆசிரியர்கள்) பணியாற்றுவார்கள். ஒவ் வொரு உதவி தேர்வாளரும் ஒரு நாளைக்கு 30 விடைத் தாள்கள் மதிப்பீடு செய்ய தரப்படுகிறது. அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண் களுக்கும் மற்ற பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கும் மதிப்பீடு செய்கிறார்கள்.
இவர்களுக்கு ஒரு விடைத் தாளுக்கு ரூ. 8 வீதம் உழைப் பூதியம் வழங்கப்படுகிறது. இது பாராபட்சமான செயல்.
தேர்வு முடிவுகள் வெளி யிட்ட பிறகு மதிப்பெண்ணில் வித்தியாசம் இருக்கும் என நினைக்கும் பிளஸ் 2 மாண வர்களுக்கு மட்டும் விடைத் தாள் நகல் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்களின் தவறு இருக்கும் பட்சத்தில் அவர் கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்.
எனவே, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசி ரியர்கள் முழு கவனத்துடன் திருத்த வேண்டும் என்பதற் காக ஒரு நாளைக்கு 24 விடைத்தாள்கள் வழங்கப் பட்டன. ஆனால், இப்போது 10ம் வகுப்பு மாணவர்கள் கேட்கும் பட்சத்தில் அவர்
களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கும் நடைமுறை அம லில் உள்ளது. எனவே பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்குவது போல ஒரு நாளைக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும்.
ஒரே அளவு வேலை செய் யும் இருவருக்கும் சமமான உழைப்பூதியம் வழங்க வேண் டும். ஒவ்வொரு முதன்மை தேர்வர்களுக்கும் 6 உதவித் தேர்வர்கள் என்ற வகையில் மட்டும் இருக்கும் வகையில் தேர்வுத்துறை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக தேர்வுத் துறைக்கு கோரிக்கை வைத் துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment