அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவர் சேர்க்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 2, 2025

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவர் சேர்க்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவச் சேர்க்கையை கடந்த மார்ச் 1-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

தற்போது சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 1-ம் வகுப்பில் ஒரு லட்சத்து 5,286 மழலையர்கள் உட்பட பிற வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post Top Ad