பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப் பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப் பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
இது குறித்து அவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படுவது குறித்து ஆளுநர் விமர்சித்துள்ளார். குறைவாக கொடுக்கிறோமே என நினைக்க வேண்டாம். அந்தத் தொகை அதைப் பெறுபவர்களுக்கு பெரிது. கொஞ்சம்தானே எடுக்கிறோம் என எங்களிடம் இருந்து யாரும் களவாட வேண்டாம். இழப்பவர்களுக்கு அது பெரிது. அதனை புரிந்தவராக அவர் முதலில் இருக்க வேண்டும். ஆளுநர் எந்த மாநிலத்திலிருந்து வந்தவர்? அந்த மாநிலம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அவர் எங்கள் பிள்ளைகளைப் பற்றி பேச வேண்டும்.
நெல்லையில் மாணவர் அரிவாளால் சக மாணவர், ஆசிரியரை வெட்டிய சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு அது குறித்து தெரிவிக்கப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பல்வேறு வகைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் வேதனையை அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், மாணவர்களின் மனதை செம்மைப்படுத்தவும்மாணவர்களுக்கு சில வகை பயிற்சிகள் வழங்கவும் முடிவு செய்துள்ளோம். தமிழக சட்டப்பேரவையில் ஏப்.24-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்றார் அவர்.
ஹிந்தி பெயரில் பாடநூல்கள்... இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்காக என்சிஇஆர்டி சார்பில் வெளியிடப்படும் ஆங்கில வழி பாடநூல்களின் பெயர்களை சந்தூர், மிர்தங், பூர்வி, கணித பிரகாஷ் என ஹிந்தியில் மாற்றியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்து பேசுகையில், பாடத்திட்ட வடிவமைப்பு, புத்தக உருவாக்கத்தை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் (என்சிஇஆர்டி) கொடுத்து விட்டால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நாம் கேட்க வேண்டியிருக்கும். அவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்காகத் தான்தேசிய கல்விக் கொள்கை வரைவு கடந்த 2019-ஆம் ஆண்டு வரைவுத் திட்டமாக இருக்கும்போதே அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார்.
தற்போது என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் ஹிந்தியை நோக்கிச் செல்கின்றன. இதனை தமிழக அரசு முழுமையாக எதிர்க்கிறது என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
0 Comments:
Post a Comment