சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் தமிழக அரசு ஊழியர்களுக்கு, 2 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க,முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படுவது, நடைமுறையில் உள்ளது. நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலை வாசி உயர்வு அடிப்படையில், அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படுகிறது.
மத்திய அரசுஊழியர்களுக்கான அகவிலைப்படி, கடந்த ஜனவரி மாதம் உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், மார்ச் மாதம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்., 1 முதல் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும், 2 சதவீதம்அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க, முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி உள்ளார்.
இது குறித்து, தமிழக நிதித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசை தொடர்ந்து, உ.பி., அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த, முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ், அகவிலைப்படி உயர்வை, முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
உத்தரவு
சட்டசபை கூட்டத் தொடரில், அமைச்சர்கள் தங்கள் துறையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் உடனடியாக நிறைவேற்றும் அறிவிப்புகளை, விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி, கால்வாய்தடுப்பு சுவர் அமைத்தல், நீர் நிலைகளை சீரமைத்தல், வெள்ள தடுப்பு பணிகள் போன்றவற்றை துரிதமாக நிறைவேற்ற வேண்டும். அடிக்கல் நாட்டு விழாவுடன் எந்த திட்டங்களும் நிற்கக் கூடாது.
தி.மு.க., மற்றும்கூட்டணி கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியை போக்கும் வகையில், அவர்களின் கோரிக்கை மனுக்களுக்கு, முக்கியத்துவம் அளித்து நிறைவேற்ற வேண்டும் என, அமைச்சர்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment