ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை பள்ளிக்கு வர உத்தரவு!

தொடக்கக் கல்வித்துறையில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் பள்ளிக்கு வருகைப் புரிந்து மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நரேஷ் தெரிவித்துள்ளார்.

 
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நரேஷ் அனுப்பிய கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில், “தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகின்றது. ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி வரையிலும், 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதியும், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதியும் தேர்வுகள் நிறைவடைகின்றன.

ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி, வகுப்பு வாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர், அந்த மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணி, அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி போன்ற நிர்வாகப் பணிகளை ஏப்ரல் 30ஆம் தேதி வரை எல்.கே.ஜி (LKG), யூ.கே.ஜி (UKG) வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மேற்கொள்ள வேண்டும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive