பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வுகள் ஏப்.8-க்கு தள்ளிவைப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, April 1, 2025

பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வுகள் ஏப்.8-க்கு தள்ளிவைப்பு

இன்று (ஏப்.1) நடைபெறுவதாக இருந்த முதல் ஆண்டு பிஎட், மற்றும் 2-ம் ஆண்டு எம்எட் செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன், அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வுகள், கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி (இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் (பிஎட் முதல் ஆண்டு மற்றும் எம்எட் 2-ம் ஆண்டு) நிர்வாக காரணங்களால் ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகின்றன.

தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும், மாற்று தேதியில் தேர்வுகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஏப்ரல் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad