அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்குகளைப் பராமரிக்கும் பல வங்கிகளில் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பலன்கள் , தனிநபர் விபத்துக் காப்பீடு . கடனுக்கான வட்டியில் சிறப்பு தள்ளுபடிகள் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , சட்டப் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மாண்புமிகு நிதியமைச்சர் , " மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த அயராது உழைக்கும் அரசு ஊழியர்களின் நலனுக்காக அரசு உறுதி செய்துள்ளது . அரசின் முயற்சியின் பலனாக , தமிழக அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கை பராமரிக்கும் முக்கிய வங்கிகள் , அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க முன் வந்துள்ளன எனவும் , வங்கிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து கீழ்காணும் விவரப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
* விபத்து மரணம் , அல்லது விபத்தால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு ரூ .1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்படும் .
* விபத்தால் இறந்த அரசு ஊழியரின் திருமண வயதை எட்டிய மகள்களின் திருமணச் செலவுக்காக தலா ரூ .5 லட்சம் நிதியுதவி , மொத்தம் ரூ .10 லட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்படும் .
* விபத்தால் இறந்த அரசு ஊழியரின் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி படிக்கும் மகளுக்கு உயர்கல்வி உதவியாக ரூ .10.00 இலட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்படும் .
* பணிபுரியும் காலத்தில் இயற்கை மரணம் ஏற்பட்டால் , ரூ .10 லட்சம் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் தொகையாக வழங்கப்படும் .
* தனிப்பட்ட கடன் , வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடன் ஆகியவற்றைப் பெறும் போது அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வட்டிச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
* இந்நேர்வில் , வரும் 2025-26 ஆம் நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கு இந்தக் காப்பீட்டுத் தொகையை வழங்கத் தயாராக இருக்கும் வங்கிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MoUs ) செய்து கொள்ள உள்ளது.
* கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது , வங்கிகள் மூலம் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு இந்த சலுகைகளை சரியான நேரத்தில் வழங்குவதை ஒருங்கிணைக்கும் என சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் , வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , சம்பளக் கணக்கின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக , அரசு ஊழியர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்து பட்டியலில் சேர்க்கப்பட்ட வங்கிகளுடன் பகிரப்பட வேண்டும்
எனவே , பேரூராட்சிகள் துறையில் காலமுறை ஊதியமேற்றமுறையில் பணிபுரியும் 490 பேரூராட்சி அலுவலர்கள் ( ம ) பணியாளர்கள் , 17 மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் , மற்றும் அவ்அலுவலக பணியாளர்கள் . பொறியாளர்கள் ஆகியோரின் விவரங்களை இத்துடன் இணைப்பட்டுள்ள படிவத்தில் உடன் பூர்த்தி செய்து மண்டல வாரியான தொகுப்பறிக்கையாக இவ்வாணையரகத்திற்கு 09.04.2025 - க்குள் தனி நபர்மூலம் அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்களை இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Govt employee salary account bank benefit letter - Download here
0 Comments:
Post a Comment