அடுத்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறப்பு எப்போது?

அடுத்த கல்வி ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பள்ளிகளை இந்த ஆண்டு குறித்த நேரத்தில் திறந்து தேர்வுக்கு முன் திட்டமிட்டு தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதையடுத்து மார்ச் 26ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 15 - ன் முடிவடைகின்றன. இதையடுத்து கோடை விடுமுறை தொடங்கிவிடும்.

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் தொடங்கின. இவை வரும் 21ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக முன்கூட்டியே, அதாவது 17ஆம் தேதியே முடிக்கும் வகையில் தேர்வு அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

கோடை விடுமுறை தொடக்கம்

எனவே ஏப்ரல் 4வது வாரத்தில் இருந்து அனைத்து மாணவர்களும் கோடை விடுமுறையை கொண்டாட ஆரம்பித்து விடுவர். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நடப்பாண்டின் வானிலையை பொறுத்து தான் கொண்டாட்டங்களும், வெளியூர் பயணங்களுக்கான திட்டமிடல்களும் இருக்கும். கோடை விடுமுறையில் விடைத்தாள் திருத்தம், புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடுதல், பள்ளிக் கல்வித்துறை திட்டச் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாநில அரசு தெளிவான திட்டமிடலை வகுத்து வருகிறது.

மீண்டும் பள்ளிகள் திறப்பு

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து 2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதற்கேற்ப பெற்றோர்களும், மாணவர்களும் சில விஷயங்களை திட்டமிடுவர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் அளித்த பேட்டியில், பள்ளிகள் திறப்பை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளின் படி முடிவுகள் எடுக்கப்படும்.

காலநிலை மேலாண்மை குழு முடிவு

முதலமைச்சர் அலுவலகத்தில் காலநிலை மேலாண்மை குழு எனத் தனியாக குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்கள் வானிலை நிலவரத்தை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் சில அறிவுரைகளை வழங்குவர். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பருவநிலை மாற்றம் காரணமாக வெயில், மழை, பனி ஆகியவை இயல்பை விட அதிகமாக பதிவாகி வருகின்றன.

ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு 

வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆண்டு இறுதி தேர்வுகளை விரைவாக நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது. எனவே அதற்கு ஏதுவாக பள்ளிகளை விரைவாக திறந்து மாணவர்களுக்கு விரைவாக பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 

எனவே திட்டமிட்டபடி அனைத்து வகை பள்ளிகளும் வருகின்ற ஜூன் 2025 முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று தெரிகிறது.

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டு கோடையிலும் வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் உச்சபட்ச வெப்பநிலை என்பது ஜூன் மாதம் பிறந்தும் தொடர்கிறது. இதற்கு முன்பு ஜூன் மாதம் பதிவான அதிகப்படியான வெப்பத்தால் 2வது, 3வது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் நடப்பாண்டும் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive