தற்போது VRS வாங்கலாம் என்ற மனநிலையில் உள்ளோர் சற்று யோசித்து முடிவெடுங்கள்
👉 8 வது ஊதியக் குழுவில் முக்கிய இரண்டு அம்சங்கள் நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
🔥🔥🔥 முதல் அதிர்ச்சி தகவல் 🔥🔥🔥
👉 01.01.2026 முதல் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.
👉 இதனால் ஒன்றிய அரசு எப்போது நடைமுறை படுத்தலாம் எனக் கருதுகிறதோ, அப்போது தான் நடைமுறைப் படுத்தப் படும்.
👉 ஊதியக் குழுவின் பரிந்துரைகளை காலதாமதமாக நடைமுறை படுத்தினால், நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது.
👉 எந்த தேதி முதல் நடைமுறை படுத்தப் படுகிறதோ, அந்த தேதி முதல் பணப்பலன்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
🔥🔥🔥 இரண்டாவது அதிர்ச்சி தகவல் - ஓய்வு பெற்றோருக்கு ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, அடிப்படை ஓய்வூதியம் ஊதிய நிர்ணயக் காரணி (Fitment factor) மூலம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது. 🔥🔥🔥
👉 அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு ஊதியம் வழங்குவதை விட, ஓய்வூதியத்திற்கு அதிக செலவிடப்படுவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
👉 காரணம் : புதிய நியமனங்கள் குறைவு, ஒப்பந்தம் மூலம் பணி நியமனம், தொகுப்பூதியம் மூலம் பணி நியமனம், ஓய்வு பெறுவோர் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணியில் உள்ளோருக்கான ஊதியத்தை விட, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதால், அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இது பற்றி சிறப்பு செய்தியும் வெளியிட்டது.
👉 இதனால் 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, புதிய ஊதிய நிர்ணயம் (Expected Fitment factor 1.85 to 2.27) பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப் படும்.
👉 ஓய்வூதியம் பெறுவோருக்கு, அடிப்படை ஓய்வூதியம் மேற்கண்ட ஊதிய நிர்ணய காரணி (Fitment factor) மூலம் அதிகரித்து வழங்கப்பட மாட்டாது.
👉 பணி நிறைவு பெறும் போது நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை ஓய்வூதியத்திற்கு மட்டும், ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப் படும்.
👉 இதனால் ஓய்வூதியம் பெறுவோருக்கு, கணிசமான அளவில் பண இழப்பு ஏற்படக்கூடும்.
👉 ஆகவே, அவசரப்பட்டு VRS தந்து விடாமல், 8 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறை படுத்தப்பட்ட பின், VRS பெற்றுக் கொள்ளலாம்.
🔥🔥🔥 தமிழகத்தில் எப்போது 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட வாய்ப்பு உள்ளது? 🔥🔥🔥
👉 ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஒன்றிய அரசுக்கு அளிப்பதற்கே, 2026 ஜூன் மாதத்திற்கு மேல் ஆகி விடும்.
👉 அதை அரசு பரிசீலனை செய்து நடைமுறை படுத்த சில மாதங்கள் ஆகலாம்.
👉 அதற்குள் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைத்திருக்கும்.
👉 2029 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது தான், ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பற்றி அப்போதைய தமிழக அரசு பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.
👉 அதன் பின், இதற்கான குழு அமைத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறை படுத்த 2030 ஆம் ஆண்டு ஆகலாம் எனக் கருதப்படுகிறது.
🔥🔥🔥 ஆகவே VRS மனநிலையில் உள்ளோர் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது 🔥🔥🔥